Shlokas for kids with tamil explanation
நம் குழந்தைகளுக்கு என்னென்ன கற்றுக்கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கான பதிவு இது. சமஸ்க்ருத ஸ்லோகங்கள் மற்றும் அதன் தமிழ் விளக்கம் இந்த post-ல் உள்ளது.
1. உள்ளங்கையை காலையில் எழுந்ததும் பார்க்கும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது.
தினமும் காலை எழுந்தவுடன் :
karagre vasathe lakshmihi karamadhye saraswathi karamoole
sthithe gowri prabhathe karadarshanam.
கராக்ரே வசதே லட்சுமி: கரமத்தியே சரஸ்வதி கரமூலே
ஸ்திதே கௌரி ப்ரபாதே கரதர்ஷனம்.
விளக்கம் :
கரத்தின் (உள்ளங்கை) ஆரம்பத்தில் வசிக்கும் லட்சுமிதேவி , கரத்தின் மத்தியில் (நடுவில்) வசிக்கும் சரஸ்வதிதேவி மற்றும் கரத்தின் முடிவில் வசிக்கும் பார்வதிதேவி இவர்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன்.
2.எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
vakrathunda mahaakaya soorya koti samaprabha nirvignam kurume deva
sarva kaaryeshu sarvadha.
வக்ரதும்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரபா நிர்விக்நம்
குருமே தேவ சர்வ கார்யேஷு ஸர்வதா .
விளக்கம் :
பெரிய உடம்பும், வளைந்த துதிக்கையும் மற்றும் சூரியனைப் போன்றவனான விநாயகனே, என் பணிகளில் ஏற்படும் தடைகளை எப்பொழுதும் நீக்குவாயாக.
guru brahma guru vishnu guru devo maheshwaraha guru sakshat
para brahma thasmai sri guruve namaha
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
விளக்கம் :
பிரம்மா , விஷ்ணு மற்றும் சிவனான முப்பெரும் தெய்வங்களை விட மிக உயரியவரான என் குருவை நான் பணிந்து வணங்குகிறேன்.
4.saraswathi namasthubyam varathe kaamaroopini vidyarambam karishyami
siddhir bhavathume sadha
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
விளக்கம் :
எண்ணிய ஆசைகள் மற்றும் வரங்களை அள்ளித் தரும் சரஸ்வதி தேவியே, என் கல்வியை முதலில் தொடங்குகிறேன். நான் கற்றுக்கொள்வது அனைத்தும் எனக்கு புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன்.
5.Jnananandamayam devam nirmala sphatikakrutim,
aadharam sarvavidyaanaam Hayagreevamupasmahe.
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவமுபாஸ்மாஹே
விளக்கம் :
தூய படிக்கல் போன்ற தெளிவான , அறிவின் உருவமான ஹயக்ரீவரைப் போற்றுகிறேன்.
இந்த 5 ஸ்லோகங்களையும் தினமும் உங்கள் குழந்தைகளுடன் நீங்களும் படித்து இறைவனின் அருளைப் பெறுங்கள்.
Comments