Kavithai - 1
மழலைச் செல்வங்களுக்கு உயிர் எழுத்து மூலம் ஒழுக்கமான சிறிய பாடல் உங்களுக்காக. படித்து களிப்புறுக.
அதிகாலை எழுந்திடு
ஆண்டவனை வணங்கிடு
இன்புடனே குளித்திடு
ஈரமின்றி துடைத்திடு
உணவுதனை உண்டிடு
ஊடகங்கள் தவிர்த்திடு
எண்ணம்போல வாழந்திடு
ஏகாந்தம் பேணிடு
ஐந்துநிலம் அறிந்திடு
ஒப்புரவு ஒழுகிடு
ஓங்குபுகழ் பெற்றிடு
ஔவைவழி நடந்திடு
Comments