Motherhood

நமக்கு குழந்தைப் பிறந்ததும் நாம் அனைவரும் பெற்றோர் என்ற உயரிய ஸ்தானத்தை அடைவோம். தாய்மை ஆஹா ! என்ன ஒரு ஸ்தானம். அந்த பிஞ்சுக் குழந்தையின் கை விரல்களும்  கால் விரல்களும் பார்க்கும்  போது ஏற்படும் பூரிப்பு தான் என்னே !

 

நாம் அனைவரும் தயாராக இருந்தாலும் ஒவ்வொரு கட்டமும் ஒரு பரீட்சை போன்றது தான். தாய்ப்பால் குடிக்கும் போது, குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது , உட்காரும் போது, நடக்க ஆரம்பிக்கும் போது, பேச ஆரம்பிக்கும் போது முதன்முறையாக சாப்பிடும் போது என ஒவ்வொரு  கட்டமும் அவர்களுடன் இருந்து நாம் அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

 

அனைத்து அம்மாக்களுக்கும் ஒரே ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன்.

யாருடைய அறிவுறையும் ஏற்று இப்படித் தான் செய்ய வேண்டும் , அப்படித் தான் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் நிறைய இருக்கும், ஒரே விஷயத்தை வெவ்வேறு விதமாக செய்யலாம். உங்கள் ஆழ் மனதில் யாரை நீங்கள் நம்புகிறீர்களோ அவர்களிடம் பகிர்ந்து கேள்விகளைக் கேளுங்கள், நீங்கள்  அவர்களிடம் பேசி முடிக்கும் முன்னரே தங்கள் கேள்விக்கான விடை  கிடைத்துவிடும் . அதைப் பின்பற்றுங்கள். தப்பாக இருப்பினும் பரவாயில்லை. உங்கள் குழந்தைக்கு எது சிறந்தது என்பது தங்களை விட சிறப்பாக வேறுயாருக்கும் தெரியாது.

 

ஒரு சில சமயம் அதுவும் உங்களுக்கு தெரியாமல் போகலாம். அதைப் போன்ற சூழ்நிலைகளை நீங்கள் தான் திறம்பட கையால வேண்டும். தாய்மையைப் பொறுத்த வரை இது சரி இது தப்பு என்பது எதுவும் இல்லை. ஆங்கிலத்தில் trial and error என்று கூறுவது போல, உங்கள் குழந்தைகளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை புரிந்து கொண்டு முடிவு எடுங்கள்.

 

 

 

இது வெறும் ஆரம்பம் தான். குழந்தை வளர வளர நமக்கு வேலைகள் அதிகம் தானே ஒழிய கம்மி இல்லை.  தயாராக இருங்கள் .  You will rock it !

Comments