Holi story in Tamil
இரண்யகசிபு என்ற அசுரன் பிரம்மனிடம் ஒரு வரத்தைப் பெற்றான், அது என்னவென்றால், நீர்,நிலம் , இரவு, பகல், மனிதன், மிருகம் , ஆயுதம், உள்ளே,வெளியே போன்ற யாராலும் மற்றும் எதனாலும் தான் அழியக்கூடாது என்பது தான். அப்படி இருந்தால் எப்படி அவர் மரணமடைகிறார் என்று பார்ப்போமா ?
பிரம்மாவிடம் வரம் பெற்ற பிறகு அவன் தன் நாட்டு மக்கள் அனைவரையும் அழைத்து இனிமேல் யாரும் கடவுளை வணங்கக்கூடாது மாறாக என்னை வணங்கவேண்டும் என்று உத்தரவு கொடுக்கிறான். அவனை எதிர்த்த அனைவரையும் கொல்வதற்கு கட்டளையிடுகிறான்.
இரண்யகசிபு என்ற அசுரனின் மகனாக பிறந்தவன் பிரகலாதன். கருவில் இருக்கும் போதே நாரதரால், நாராயணரின் நாமத்தை கேட்டறிந்தவன். அதன் காரணமாக பிரகலாதன் பிறந்தது முதலே, நாராயணரின் மேல் பக்தி கொண்டவராக இருந்தான். எப்பொழுதும் அவன் வாயிலிருந்து நாராயணா என்ற வார்த்தையை ஜபம் செய்து கொண்டிருப்பான். அவனது தந்தை இரண்யகசிபுவுக்கு பிடிக்கவில்லை. பிரகலாதனிடம் தன்னை வணங்குமாறு கேட்டான்.அவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை .மகன் என்றும் பாராமல், பிரகலாதனைக் கொல்ல உத்தரவு கொடுத்தான். ஒரு பெரிய மலையிலிருந்து அவனைக் கீழே விழும் படி தள்ளினான், மதயானை கொண்டு மிதிக்க உத்தரவிட்டான், விஷநாகங்களைக் கடிக்கச் செய்தான். எதுவும் பலனளிக்கவில்லை. பிரகலாதன் சர்வகாலமும் நாராயணா என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.
பின்னர் இரண்யகசிபு தன் தங்கை ஹோலிக்காவின் உதவியை நாடினான். ஹோலிகாவிற்கு நெருப்பில் சென்றால் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது என்ற வரத்தை இரண்யகசிபு நினைவுகூர்ந்து பிரகலாதனை தீயிலிட்டுக் கொளுத்த உத்தரவிடுகிறான். அவளும் அதே போல் பிரகலாதனை மடியில் வைத்துக்கொண்டு நெருப்பில் அமர்கிறாள்.
அவன் வழக்கம்போல நாராயணா என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தான். நெருப்பு ஹோலிகாவை சுட்டெரித்தது, பிரகலாதன் எந்த காயம் இன்றி வெளியே வந்தான்.
இறைசக்தியின் முன் தீயசக்திகள் அழிந்து போகும் என்ற உண்மையை இறைவன் உணர்த்தினார். இந்நாளே ஹோலி பண்டிகையாகக் கொண்டாடப்படுவதாக ஒரு கதை உண்டு.
வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும்,. திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.
முடிவில் இரண்யகசிப்பை விஷ்ணு "நரசிம்ம " அவதாரத்தில் மாலை வேளையில் வாசல்படியில் அவனைத் தன் கைகளால் கிழித்துக் கொன்றார்.
pic courtesy : mocomi kids, tamil samayam
Comments