Fine Motor importance
என்னடா இது நேத்து தான் பொறந்த மாதிரி இருக்கான் , அதுக்குள்ள வளந்துடானே ! இந்த மாதிரி எத்தனை பேர் நெனச்சுட்டு இருக்கீங்க. நானும் உங்கள மாதிரி தான். பிறந்த குழந்தை அதிகம் தூங்குவாங்க, அழுவாங்க , பால் குடிப்பாங்க , poop செய்வாங்க, திருப்பி இதே மாதிரி continue ஆகும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவங்க கைகள விரிக்க ஆரம்பிப்பாங்க , விரல் எல்லாம் அசைப்பாங்க, அதுக்கு அப்பறமா தேடுதல் தான். அதாவது exploration.
சரி Fine motor skills னா என்ன ?
நம் குழந்தைகளின் கைகளில் இருக்கும் சிறு தசைகளின் உதவியுடன் செய்யும் விஷயங்கள் தான் Fine Motor skills. கை என்றால் நம்முடைய உள்ளங்கை, விரல்கள் மற்றும் மேற்கை என அனைத்தும் அதனுள்ளே அடங்கும்.
இதன் முக்கியத்துவம் என்ன?
இதன் மூலம் குழந்தைகள் எப்படி ஒரு வேலையை திறம்படச் செய்கிறார்கள், அந்த வேலையை எவ்வளவு வேகத்தில் செய்கிறார்கள் அவர்களுக்கு நாம் எப்படி வழிகாட்ட வேண்டும் எனத் தெரிந்து கொள்ளலாம். Fine motor skill என்பது பல தனித்தனியாக செய்ய கூடிய வேலையை எப்படி ஒன்றாகச் சேர்த்து திறம்பட செய்து முடிக்க வேண்டும் என்பதற்கான ஒரு பயிற்சி எனக் கூறலாம்.
எதெல்லாம் Fine Motor Skills உள்ளே அடக்கம் ?
- பென்சில் மற்றும் பேனாவைப் பிடிப்பது
- கத்திரிக்கோல் பயன்பாடு.
- பொம்மைகளுக்கு டிரஸ் செய்வது.
- Building Blocks வைத்து விளையாடுவது.
- பல் துலக்குவது, குளிப்பது போன்ற விஷயங்கள்
- காலணிகளை அணிந்து கொள்வது
- ஷர்ட் பட்டன் போடுவது
- ஷூ lace கட்டுவது.
உங்கள் குழந்தைகளுடன் செய்யக் கூடிய எளிய activity கள்:
உங்களுக்கு இதைப் போன்று activity எப்படிச் செய்வது என சந்தேகம் இருந்தால் comment section-ல் பதிவு செய்யவும்.
நான் செய்த சில activity களை YouTube channel-ல் பதிவு செய்து வருகிறேன் , உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe செய்யவும்.
Comments