அப்பா - Fathers day special
குடும்பம் என்னும் தோட்டத்தின்
தலைவனாய் இருந்து நம்மை
தலைவியின் துணையாலே தாங்குபவர்
எல்லாம் நாம் அறிந்திடவும்
ஏற்றம் என்றும் பெற்றிடவும்
அல்லும் பகலும் உழைத்திடுவார்
கலைகள் பலவும் நாம் கற்க
விலைகள் தந்து விவேகமாய்
விரும்பி வளர்க்கும் வித்தகராகம்
எத்துணை இடர்கள் வந்தபோதும்
அத்தனை துன்பமும் வென்றிட்டு
உவகை தந்திடும் உத்தமராம்
மகனோ மகளோ பேதமில்லை
மகிழ்ச்சி ஒன்றே இலக்காக
மனமுவந்து உழைத்திடும் மாமனிதர்
உலகில் உயர்வு நாம்பெறவே
உழைப்பை நாளும் கொடுத்திட்டு
உங்களுக்காய் வாழ்ந்திடும் பண்பாளர்
எந்தை சிவனை மறவாது
எந்நாளும் நாம் தொழுவதுபோல்
தந்தை திருவடி பணிந்திடுவோம்
தரணியில் உயர்வாய் வாழ்ந்திடுவோம்.
Comments